இலங்கை

முட்டைவிலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறையாது !

Published

on

முட்டைவிலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறையாது !

 முட்டை விலை குறைந்தபோதும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Advertisement

இலங்கையில் முட்டை விலை காலநிலை போன்றது. இன்றுள்ள விலை நாளை இல்லை. நாளுக்கு நாள் மாற்றமடைகிறது.

15, 20 ரூபாவுக்கு இருந்த முட்டை 60, 70 ரூபாவரை விலை அதிகரித்தது.

தற்போது மீண்டும் 25,30 ரூபாவரை விலை குறைந்துள்ளது.

Advertisement

இந்த விலை குறைப்பை அடிப்படையாகக்கொண்டு பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாமல் இருக்கிறது.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு மேற்கொள்வதற்கு நிச்சயமாக கோதுமை மா மற்றும் மாஜரின் விலை குறைவடையவேண்டும்.

கோதுமா விலை குறைப்பு தெரிந்தளவில் இரண்டு வருடங்களுக்கும் அதிக காலமாக இடம்பெறவில்லை.

Advertisement

டொலரின் பெறுமதி 300, 400 ரூபாவுக்க இருக்கும்போது இருந்த விலையே தற்போதும் கோதுமை மா விலை இருந்து வருகிறது.

எனவே இதில் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனால். கோதுமை மா மற்றும் மாஜரின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தற்போது கடைகளில் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கேக், 700 ரூபாவரை குறைத்து விற்பனை செய்ய முடியும்.

Advertisement

அவ்வாறு இல்லாமல் முட்டை விலை குறைவடைந்தவுடன் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம் செய்ய எந்தவகையிலும் முடியாது என்றும் அவர் கூறினார்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version