இலங்கை

யாழ்ப்பாணத்தில் மூன்று மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

Published

on

யாழ்ப்பாணத்தில் மூன்று மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் வியாழக்கிழமை(26) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. , தெல்லிப்பழை பன்னாலைப் பகுதியைச் சேர்ந்த பங்கஜன் சிறீதிகன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;

Advertisement

குறித்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை வழங்குவதாக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை நேற்றுமுன்தினம் புதன்கிழமை(25) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இருதய செயலிழப்பு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version