இந்தியா
Manmohan Singh Death News Live Updates: மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஸ்டாலின் டெல்லி பயணம்
Manmohan Singh Death News Live Updates: மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஸ்டாலின் டெல்லி பயணம்
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தகவலளித்துள்ளார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தாராளமயமாக்கலுக்கு வழிவகுத்து வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டை 1991-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இன்று காலை 9:30 மணியளவில் அவர் டெல்லி புறப்படுகிறார்.பா.ஜ.க சார்பில் இன்று மாவட்டங்களில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மன்மோகன் சிங் மறைவையொட்டி, ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஈடு இணையற்ற பொருளாதார வல்லுநராக மன்மோகன் சிங் திகழ்ந்தார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். குறிப்பாக, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியாகவும், குறை சொல்ல முடியாத ஒருமைப்பாட்டின் தலைவராகவும் அவர் செயல்பட்டார் என மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.மன்மோகன் சிங் மறைவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்துவதில், மன்மோகன் சிங் முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாளை (டிச 28) நடைபெறவிருந்த காங்கிரஸ் நிறுவன நாள் உள்ளிட்ட அக்கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் மறைவையொட்டி, நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.