இலங்கை

அர்ச்சுனா மக்களின் பிரதிநிதி கிடையாது ; சகாதேவன் சூளுரை

Published

on

அர்ச்சுனா மக்களின் பிரதிநிதி கிடையாது ; சகாதேவன் சூளுரை

சிங்கள ஊடகங்களுக்கு ஒரு கதையும் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு கதையும் அவர் சொல்லி மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி குழப்பத்தின் பிரதிநிதியாக இருக்கின்றாரே தவிர அவர் ஒரு மக்களின் பிரதிநிதி கிடையாது” எனவும் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சஜித் பிரமேதாசவிற்கு பின்னால் ஒளிய முற்பட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது ஜே.வி.பியிற்கு பின்னாள் ஒளிய முயற்சித்துக்கொண்டிருக்கின்றார் என பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Advertisement

யாழ் ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிககையில்;,

“அதிகாரிகளை நோக்கி கேள்விகளை எழுப்பவதற்கு முன் அவர் தன்னை நோக்கி கேள்விகளை கேட்டுகொள்ள வேண்டும்.

முகப்புத்தகத்தில் வரும் கருத்துக்களை வைத்துகொண்டு அவர் தன்னை பெரிய ஆளாக நினைத்துகொண்டிருக்கின்றார், அவருடைய பதவி ஊழலுக்காக அவர் கொடுத்த குரலுக்கானது. அதனை அவர் துஸ்பிரயோகம் செய்து வருகின்றார்

Advertisement

சிங்கள ஊடகங்களுக்கு ஒரு கதையும் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு கதையும் அவர் சொல்லி மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி குழப்பத்தின் பிரதிநிதியாக இருக்கின்றாரே தவிர அவர் ஒரு மக்களின் பிரதிநிதி கிடையாது” எனவும் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் இராமநாதன் அர்ச்சுனா-சகாதேவன் இருவரும் முரண்பட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version