உலகம்

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்…ஐந்து பத்திரிகையாளர்கள் சாவு!

Published

on

Loading

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்…ஐந்து பத்திரிகையாளர்கள் சாவு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மூண்ட யுத்தம் தற்போது வரையில் தொடர்கிறது.

இதில் பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு சுமார் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்தது.

Advertisement

இவ்வாறிருக்க தற்போது மத்திய காசாவில் அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த அகதிகள் முகாம் அருகில் பத்திரிகையாளர்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வாகனங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையில் 130 இற்கும் அதிகமான பலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளதோடு, காசாவுக்குள் வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்காததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version