இலங்கை

உரிய பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி ; முன்னாள் ஜனாதிபதி ரணில்

Published

on

உரிய பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி ; முன்னாள் ஜனாதிபதி ரணில்

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் போது, அதனுடாக இலங்கைக்கு பாரிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் அடால் பிஹாரி வாஜ்பேயின் ஜனன தினத்தை முன்னிட்டு இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையே கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல் வரவேற்கதக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி உரிய பாதையில் பயணிக்கின்றது என்பது நன்கு புலப்படுகின்றது.

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Advertisement

தற்போது, தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

இதன்மூலம் பிராந்தியம் என்ற ரீதியில் இலங்கை பல நன்மைகளை அடையும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version