இலங்கை
களனி ஆற்றுப் படுகையில் மணல் அகழ்வு நடவடிக்கைக்கு தடை!
களனி ஆற்றுப் படுகையில் மணல் அகழ்வு நடவடிக்கைக்கு தடை!
களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த பல்வேறு விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி நேற்று (27.12) முதல் அமுலுக்கு வரும் வகையில் தாழ்வான நிலங்களை மீட்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடுவெல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அணையினால் வெள்ள நிலைமைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.