இலங்கை

கிளிநொச்சி ஊடகவியலாளர் கடத்தல் சம்பவம்… நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

Published

on

கிளிநொச்சி ஊடகவியலாளர் கடத்தல் சம்பவம்… நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று முன்தினம் (26-12-2024) கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றையதினம் (28-12-2024) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களை டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

மேலும், குறித்த தினத்தில் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version