விளையாட்டு

ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம்; கார்ல்சனுக்கு நடந்த சோகம்!

Published

on

ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம்; கார்ல்சனுக்கு நடந்த சோகம்!

ஐந்துமுறை உலக சாம்பியனான் மேக்னஸ் கார்ல்சன் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற மறுத்ததால் உலக ரேபிட் மற்றும் ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் நடந்த இந்த போட்டிக்கு நடப்பு சாம்பியன் கார்ல்சன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்திருந்தார். போட்டி ட்ரெஸ் கோடு விதிமுறைகளின் படி ஜீன்ஸ் தடை செய்யப்பட்டது. முதலில் அவருக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. உடனடியாக உடைமாற்றவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கார்ல்சன் மறுக்கவே, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, கால்சன் போட்டி நடந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

Advertisement

கார்ல்சன் தன்னால் உடனடியாக உடை மாற்ற முடியாது . அடுத்த நாளில் இருந்து சரியான ஆடையுடன் வருவதாக கூறினார். எனினும், அவரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்த பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் அறிக்கையில் “ஆடைகள் பற்றிய விதிமுறைகள் தொழில்முறை வீரர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட FIDE தடகள ஆணையத்தின் உறுப்பினர்களால் முடிவு செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த விதிமுறைகள் நடமுறையில் இருக்கின்றன. இந்த விதிகள் குறித்து அனைத்து போட்டியாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். வீரர்களின் தங்கும் அறைகள் கூட போட்டி நடக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதை உறுதி செய்கிறோம். இதனால் விதிமுறைகளைக் கடைபிடிப்பது எளிதான காரியம்தான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ல்சன் கூறுகையில், எனக்கு இத்தகைய ஆடைக்கப்பட்டுப்பாடுகள் சோர்வை ஏற்படுத்துகிறது. இனிமேல், FIDE நடத்தும் எதிலும் கலந்துகொள்ள விருப்பமில்லை. பிளிட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version