இலங்கை

தனித்து களமிறங்கவுள்ள தமிழ் தேசியக் கட்சி!

Published

on

தனித்து களமிறங்கவுள்ள தமிழ் தேசியக் கட்சி!

ரெலோ  மற்றும் புளொட் அமைப்புகள் தனித்து செயற்பட முற்படுமானால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து தமிழ் தேசியக் கட்சி தனித்து களமிறங்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் ஏனைய கட்சிகள் மக்கள் செல்வாக்கு அற்று போவதால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தாம் தனித்து செயற்படவுள்ளதாக  செய்திகள் வெளியாகியிருந்தன என ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

Advertisement

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டம் நாளை வவுனியா மாவட்டத்தில் கூட இருந்த நிலையில் ரெலோ இயக்கத்தின்  ஊடகப் பேச்சாளர் சுரேன்குருசாமியின்  மனைவியின் தாயார் இறந்தமையினால்  குறித்த கூட்டம் பிற் போடப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ரெலோ மற்றும் புளொட் இயக்கம் தனித்து செயற்பட முனையுமானால் தமிழ் தேசியக் கட்சியாக தனித்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற இருக்கின்ற அனைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தல் களத்தில் நிற்போம்.

Advertisement

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய கட்சியின் நிர்வாகக்குழு கலந்துரையாடவுள்ளோம்.

மேலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்ற பொழுது அவர்கள் தனித்து செயற்படவுள்ளார்களா அல்லது இந்த விடயம் உண்மையா என்பது தொடர்பில் உண்மை தன்மையை அறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version