இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் 8 பேர் மரணம்

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் 8 பேர் மரணம்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பெய்த கனமழைக்கு இடையே பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து தல்வாண்டி சபோவில் இருந்து பதிண்டா நோக்கிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version