இலங்கை

புத்தளத்தில் திமிங்கல வாந்தியுடன் இருவர் கைது

Published

on

புத்தளத்தில் திமிங்கல வாந்தியுடன் இருவர் கைது

புத்தளம் – கருவலகஸ்வெவ, நிக்கவெரட்டிய வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிரியுள்ள பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது திமிங்கலத்தின் அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2 கிலோ கிராம் அம்பரை கொள்வனவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரிகளிடம் 150 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது மேற்படி இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் – தல்கஸ்கந்த மற்றும் கிரியுள்ள வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version