இலங்கை

பேருந்துகளை கண்காணிக்க விசேட நடவடிக்கை

Published

on

பேருந்துகளை கண்காணிக்க விசேட நடவடிக்கை

  நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பயணிகள் பஸ்களை சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூர சேவை பஸ்களில் அவர்கள் கணிசமான தூரம் பயணிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாகச் செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.

சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் பஸ்ஸினை நிறுத்தி சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளுக்கு அறிவுறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version