இலங்கை

பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிபோல் செயற்பட்டு 17 கடவுச்சீட்டுக்களை பெற்ற நபர்!

Published

on

பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிபோல் செயற்பட்டு 17 கடவுச்சீட்டுக்களை பெற்ற நபர்!

பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியாக தோன்றிய நபர் ஒருவர் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வதகல மற்றும் அமைச்சின் அதிகாரிகளை ஏமாற்றி 17 புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது குறிப்பிட்ட நபர் தாம் கடமைகளை பொறுப்பேற்ற நாளில் அமைச்சின் பல்வேறு திணைக்களங்களுக்கு அழைத்துச் சென்று தேநீர் விருந்து கூட நடத்தியதாக தெரிவித்தார். 

Advertisement

 இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க ஜனாதிபதி செயலகத்தினால் தான் அனுப்பப்பட்டதாக குறித்த நபர் அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வதகல தெரிவித்தார். 

 பிரதியமைச்சர் வதகலவின் உத்தரவு எனக்கூறி குறித்த நபர் 17 புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டமை மறுநாள் அமைச்சுக்கு சென்ற போது தெரியவந்ததாக அவர் கூறினார்.

விசாரணைக்குப் பிறகு அந்த நபர் நிஷா என்ற வெளிநாட்டவர் என்பது தெரியவந்தது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version