இலங்கை
மீனவர் பிரச்சினை ; யாழ். கடற்றொழிலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடிய எம்.பி அர்ச்சுனா
மீனவர் பிரச்சினை ; யாழ். கடற்றொழிலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடிய எம்.பி அர்ச்சுனா
மீனவர் விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு எந்த விடயத்தினையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு மேலதிகமாக தாம் நாடாளுமன்றில் குரல் கொடுக்கவுள்ளதாகவும் இராமநாதன் அர்ச்சுனா கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்
இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் உள்ளிட்ட சம்மேளன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்
இதன் போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது