இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

Published

on

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி இன்று காலை 8 மணிக்கு மன்மோகன் சிங்கின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முற்பகல் 9.30 மணி வரை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் முழு இராணுவ மரியாதையுடன் முற்பகல் 11.45க்கு அவரது உடல் அக்கினியுடன் சங்கமிக்கும் இறுதி சடங்குகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை மன்மோகன சிங்கின் மறைவுக்காக எதிர்வரும் முதலாம் திகதி வரை 7 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 7 நாட்களில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும், இந்தியா முழுவதிலும், வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்மோகன்சிங் கின் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவித்தது.

Advertisement

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மன்மோகன்சிங் உடல் தகனம் செய்யும் இடத்தில் அவருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் நிர்வாக ரீதியாக அதில் தாமதம் ஏற்படும் என்பதால் காங்கிரஸ் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்நிலையில், சுமார் 10 மணி அளவில் மன்மோகன்சிங் உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் ஊர்வலமாக யமுனை நதிக்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version