இலங்கை

வர்த்தகர் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள்!

Published

on

வர்த்தகர் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள்!

நீர்கொழும்பு – சீதுவ, லியனகேமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவத்தில் 53 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சீதுவ, லியனகேமுல்ல, வெலபடபார பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இன்று (28-12-2024) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Advertisement

துப்பாக்கிச்சூட்டில் நபர்கள் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தின் மூத்த மகன் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 73 வயதான வர்த்தகர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது மற்றைய மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த காரை கட்டுநாயக்க, கோவின்ன பகுதியில் உள்ள மயானத்திற்கு அருகில் வைத்து எரிந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த துப்பாக்குச் சூட்டு சம்பவத்திற்காக T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version