சினிமா

இணையத்தில் ட்ரெண்டாகும் “ராயன்” மேக்கிங் வீடியோ! குஷியில் தனுஷ் ரசிகர்கள்!

Published

on

இணையத்தில் ட்ரெண்டாகும் “ராயன்” மேக்கிங் வீடியோ! குஷியில் தனுஷ் ரசிகர்கள்!

பிரபல நடிகர் தனுஷ் திரையில் நாயகனாகவும் திரைக்கு பின் இயக்குநராகவும் இருந்து இயக்கிய திரைப்படம் தான் ராயன். இப்படத்தின் மேக்கிங் வீடீயோவை சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றபோதும் வசூலில் கொடிகட்டி பறந்தது.  இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்து ரசிகர்களை கவர்ந்து பெரியளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் ஏற்கனவே ராயன் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் குஷிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம். தற்போது புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.”ராயன்” திரைப்படத்தின் அடுத்த மேக்கிங் வீடீயோவை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது தயாரிப்பு நிறுவனம் . இவ் ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ராயனின் சிறுவயது காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது என்பதை காட்டுவிதமாகவே இந்த மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version