இந்தியா

உத்திரமேரூர்: தடுப்பணையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

Published

on

உத்திரமேரூர்: தடுப்பணையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது நேற்று (டிசம்பர் 28) நீருக்கடியில் உள்ள மணலில் சிக்கி இரு குழந்தைகள், ஒரு பெண் ஆகிய மூவர் உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்ற சென்ற ஒருவரும் மணலில் சிக்கி, பின்னர் அவர் மீட்கப்பட்டார்.

உத்திரமேரூர், வெங்கச்சேரி அருகே உள்ள கடம்பரை கோயில் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மனைவி பத்மா (55). இவரது மகள்கள் சுதா, கலைச்செல்வி. இவர்கள் திருமணம் முடிந்து சென்னை அயனாவரத்தில் உள்ளனர்.

Advertisement

சுதாவின் மகன் தீபக்குமார் (16), கலைச்செல்வியின் மகள் வினிஷா (9) ஆகிய இருவரும் பாட்டி வீட்டுக்கு விடுமுறையை கழிக்க வந்தனர்.

பத்மா, இந்த இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கச்சேரி தடுப்பணைக்குச் சென்றார். உடன் உறவினர் வினோத்குமாரும் சென்றார்.

குழந்தைகள் தண்ணீரில் இறங்கி குளிக்கும்போது மணலில் சிக்கினர். இதனைக் கண்ட பத்மா அவர்களை காப்பாற்ற முயன்றார். மூவரும் மணலில் சிக்கி மூழ்கினார்.

Advertisement

மூவரும் மூழ்குவதை கண்ட வினோத்குமார் அருகாமையில் உள்ளவர்களை சத்தமிட்டு அழைத்தபடி அவர்களை காப்பாற்ற முயன்றார். அவரும் மணலில் சிக்கினார். அருகாமையில் இருந்தவர்கள் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டனர். மற்றவர்கள் மணலில் சிக்கி உள்ளே மூழ்கினர்.

இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு பத்மா, வினிஷா, தீபக்குமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Advertisement

உயிரிழந்த மூவர் சடலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பாக மாகரல் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version