வணிகம்

கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடன் பெற முடியுமா? நீங்கள் அறிய வேண்டிய ஆர்.பி.ஐ வழிகாட்டுதல்கள்!

Published

on

கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடன் பெற முடியுமா? நீங்கள் அறிய வேண்டிய ஆர்.பி.ஐ வழிகாட்டுதல்கள்!

கூட்டுறவு வங்கிகள் தனிப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் வீட்டு நிதித் தேவைகளுக்கு கடன் வழங்கலாம். ஆனால் ரிசர்வ் வங்கி, அவர்களின் நிகர மதிப்பின் அடிப்படையில் வரம்புகளை நிர்ணயிப்பதால் அவர்கள் வழங்கக்கூடிய வீட்டுக் கடன் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும்.அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கி தொடர்பான கேள்விகளை, பாபுராம் நிஷான் எழுப்பியுள்ளார். குறிப்பாக, கூட்டுறவு வங்கிகள் வழங்கும் சலுகைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநில கூட்டுறவு வங்கிகள் (எஸ்டிசிபி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (டிசிசிபி) மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (யுசிபி) ஆகியவை தனிநபர் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன என்றார். குறிப்பாக, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட வரம்புகளின்படி கடன் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.இந்த வங்கிகளின் நிகர மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்குவதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.கூட்டுறவு வங்கியின் வகைகள் மற்றும் அவர்கள் அனுமதிக்கக்கூடிய கடனின் வரம்பு:ரூ. 100 கோடிக்கும் குறைவான நிகர மதிப்புள்ள மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடன் வாங்குபவருக்கு ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கலாம். 100 கோடிக்கு மேல் நிகர மதிப்புள்ள மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், ரூ. 75 லட்சம் வரை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (யுசிபி)  என்ற அடிப்படையில், ரூ. 100 கோடி வரை டெபாசிட் உள்ள அடுக்கு-I யூசிபிகள் ஒரு தனிநபருக்கு வீட்டுக் கடனாக ரூ. 60 லட்சம் வரை நிதியளிக்க முடியும். 100 கோடி ரூபாய்க்கு மேல் மற்றும் 1000 கோடி ரூபாய் வரை டெபாசிட் உள்ள அடுக்கு-II யூசிபிகள் ரூ. 1.4 கோடி வரை வீட்டுக் கடனாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.வீட்டுக் கடன்கள் உறுதியான சொத்துகளால் வழங்கப்படுவதால், குறைந்த அபாயத்துடன் கூட்டுறவு வங்கிகளின் வணிகத்தைப் பல்வகைப்படுத்துவதற்கான பாதுகாப்பான நடைமுறையை அவை வழங்குகின்றன.கூட்டுறவு வங்கிகள், அதன் பயனாளிகளுக்கு உரிய காலத்தில் மலிவு விலையில் கடன் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version