சினிமா
சினிமா துறையில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த குஷ்பு.! நெகிழ்ச்சி பதிவு
சினிமா துறையில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த குஷ்பு.! நெகிழ்ச்சி பதிவு
நடிகை குஷ்பு ‘வருஷம் 16’ என்ற படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து ரஜினி காந்த், கமலஹாசன், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமாக காணப்பட்டார்.80, 90 ஆம் ஆண்டு கால பகுதிகளில் யாராலும் அசைக்க முடியாத ஒரு நடிகையாக காணப்பட்டார். அதன் பின்பு இயக்குநரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.d_i_aசமீபத்தில் சுந்தர். சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படத்தின் ஒரு பாடலில் குஷ்பு, சிம்ரன் ஆகியோர் சாமி பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார்கள். தற்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார் குஷ்பு.இந்த நிலையில், நடிகை குஷ்பு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து இன்றையுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவுடன் தனது புகைப்பட வீடியோவையும் பதிவிட்டு உள்ளார்.குறித்த வீடியோ வைரலாகி வருவதோடு அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில், தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனதெரிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.