இலங்கை

சுது கங்கையில் வழுக்கி வீழ்ந்த இளைஞன்… காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த இருவர்!

Published

on

சுது கங்கையில் வழுக்கி வீழ்ந்த இளைஞன்… காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த இருவர்!

மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றிய 2 இளைஞர்கள் சுது கங்கையில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் நேற்றையதினம் (28-12-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் சிக்கியிருந்த பீப்பாய் ஒன்றை அகற்ற முற்பட்ட ஒருவர் வழுக்கிச் சுது கங்கையில் வீழ்ந்துள்ளார்.

இதன்போது அவரை காப்பாற்றுவதற்காக மற்றைய இளைஞர் முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் நீரால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

Advertisement

குறித்த சம்பவத்தில் மாத்தளை – களுதாவளை மற்றும் கிவுல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 இளைஞர்களே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version