சினிமா

திருட்டுத்தனமாக அதை செய்வேன்..ஆனால் அப்பாவுக்கு… உண்மையை உடைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்..

Published

on

திருட்டுத்தனமாக அதை செய்வேன்..ஆனால் அப்பாவுக்கு… உண்மையை உடைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்..

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னையும் பற்றியும் தன் பெற்றோர் ஏற்படுத்திய சூழ்நிலையை பற்றியும் பகிர்ந்துள்ளார்.அதில், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை அதிகம், ஆனால் என் அப்பாவுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததன் காரணமாக எங்களால் கோயிலுக்கு செல்லமுடியாமல் இருந்தது. அதனால் திருட்டுத்தனமாக அப்பாவுக்கு தெரியாமல் கோயிலுக்கு சென்றும் தேவாலயத்திற்கும் செல்வேன்.ரொம்ப நாளுக்கு நான் இப்படி செய்வது அப்பாவுக்கு தெரியாது, தாத்தாவுடன் சென்றாலும் அப்பாவிடம் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடுவேன்.நான் இன்று தைரியமாகவும் இந்தநிலைமையில் இருப்பதற்கு காரணம், கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கைத்தான். ஆனால் அது அப்பாவுக்கு பிடிக்காது.அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருந்தார். நான் வளரும்போது கடவுளின் சக்தியை நானே கண்டுபிடித்து பின் புரிந்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version