இந்தியா

புத்தாண்டு விடுமுறை.. வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்!

Published

on

புத்தாண்டு விடுமுறை.. வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்!

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட பலவகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காகப் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம்.

தற்போது விடுமுறைக்காலம் என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துவருகின்றனர். இந்த நிலையில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதாலும், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் வருகைக்காகத் திறந்திருக்கும்” என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version