சினிமா

மலையாள சினிமாவிற்கு 700 கோடி லாஸ் – கொதிக்கும் தயாரிப்பாளர்கள்!

Published

on

மலையாள சினிமாவிற்கு 700 கோடி லாஸ் – கொதிக்கும் தயாரிப்பாளர்கள்!

2024-ஆம் ஆண்டு மலையாள திரையுலகிற்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள் தமிழ், தெலுங்கு சினிமா இண்டஸ்டிரிகளில் வசூலில் சக்கை போடு போட்டது. அதிகாரப்பூர்வமாக இந்த இரண்டு படங்களும் ரூ.100 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்தன.

Advertisement

அதேபோல ஆவேஷம், ஆடு ஜீவிதம், ஏ.ஆர்.எம், கிஷ்கிந்தா காந்தம், சூக்‌ஷமதர்ஷினி திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா ரசிகர்கள் பலரும் இந்த ஆண்டு மலையான சினிமாவின் கோல்டன் பீரியட் என்று கூறி வரும் நிலையில், அதற்கு மாறாக மலையாள சினிமாவில் இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-ஆம் ஆண்டு மொத்தம் 199 மலையாள படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் 26 படங்கள் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது.

இந்த படங்களின் மொத்த பட்ஜெட் ரூ.1000 கோடி. ஆனால், ரூ.300 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான புரொடக்‌ஷன் செலவு, நடிகர்களின் சம்பள உயர்வு தான் இதற்கு காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version