இந்தியா
’மீனவர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்’
’மீனவர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்’
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகம் இராமநாதபுரம் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்
“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய, இலங்கை இரு நாட்டு பிரச்சினைகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதுடன், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அவரது மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது ” என்றும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளை இரு நாட்டு மீனவர்களும், இருநாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்திய மற்றும் சீன அரசுகள் இலங்கைக்கு பெரும் தொகையை நிதியாக அளித்ததால் இன்று இலங்கை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நினைவுபடுத்தினார்.
எனவே இரு நாடுகளுடன் இலங்கை தொடர்ந்து நட்புடன் இருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.