சினிமா

40 நாள் சுயநினைவு இல்லை! விஜயால் என்மகன் உயிர் வாழுறான்! நெகிழ்ச்சியில் நாசர்!

Published

on

40 நாள் சுயநினைவு இல்லை! விஜயால் என்மகன் உயிர் வாழுறான்! நெகிழ்ச்சியில் நாசர்!

நடிகர் நாசர் சினிமா துறையில் பிரபலமானவர். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் தனது மகன் அம்மா அப்பா என்று சொல்லவில்லை முதலில் விஜய் சென்று தான் சொன்னார் என்று நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகர் நாசர் சமீபத்தில் முபாசா என்ற கதையில் வாய்ஸ் கொடுத்து அசத்தி இருப்பார். இது சமீபத்தில் ரிலீசான நிலையில் பலரது பாராட்டினையும் பெற்றுவருகிறது. இந்நிலையில் பிரபல யூடுப்பர் மதன்கௌரியுடனான  சமீபத்திய பேட்டில் “உங்களுடைய மகன் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக சேர்ந்து இருப்பாரு அவ்வளோ பெரிய ரசிகனா?” என்று கேட்க அதற்கு நாசர் இவ்வாறு பதிலளித்திருந்தார். அவர் கூறுகையில்  “இவர் என்னுடைய மூத்த மகன். சைவம் திரைப்படம் ரிலீசுக்கு பிறகு ஒரு விபத்து நடந்தது. அதுல இருந்து 40 நாள் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அது கோமாநிலைதான். அப்போ அம்மா-அப்பா எல்லாம் சொல்லவில்லை விஜய் என்று சொன்னான். என்னுடைய மனைவி சைக்கோலஜிஸ்ட் சோ அவங்க அதை புரிஞ்சிகிட்டு அவனுக்கு விஜய் திரைப்படங்கள், பாடல்கள் எல்லாம் காட்டினோம். அப்போதுள்ள இருந்து அவன் தீவிர தளபதி ரசிகன் ஆகிவிட்டான்” என்று கூறியுள்ளார் நாசர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version