இலங்கை

இனம்தெரியாத கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர் ; நேர்ந்த கதி

Published

on

இனம்தெரியாத கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர் ; நேர்ந்த கதி

  மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நேற்று (29) நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

குறித்த நபரைக் கடத்த முச்சக்கரவண்டியொன்றில் 6 பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் போதைப்பொருள் தொடர்பான தகராறே கடத்தலுக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version