இலங்கை

இராணுவம், கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்!

Published

on

இராணுவம், கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்!

இலங்கை இராணும் மற்றும் கடற்படைக்கு இன்றுமுதல் புதிய தளபதிகள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் ஓய்வையடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேலும் கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட கடற்படையின் 26ஆவது தளபதியாக பதவியேற்கவுள்ளார்.

Advertisement

அத்துடன், பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ, விமானப்படை அல்லது கடற்படைத் தளபதி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, பாதுகாப்புப் படைகளின் பிரதானி என்ற பதவி நிலையை இல்லாமல் செய்வது தொடர்பிலும் அரச உயர்மட்டங்களில் ஆலோசனைகள் இடம்பெறுவதாக இன்னொரு தரப்புத் தகவல்கள் அண்மைக்காலமாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version