இலங்கை

கைவிடப்பட்ட அரிசி ஆலைகள் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அவசர உத்தரவு!

Published

on

கைவிடப்பட்ட அரிசி ஆலைகள் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அவசர உத்தரவு!

பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் அரிசி ஆலைகளின் களஞ்சியசாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்காக தயார்ப்படுத்துமாறு வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 

 ஹிங்குரக்கொட சதொச அரிசி ஆலையின் களஞ்சியசாலை மற்றும் கல்கமுவ அரசாங்க நெற் களஞ்சியசாலை ஆகியவற்றுக்கான கள விஜயத்தின் பின்னர் அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். 

Advertisement

 நாட்டில் மீண்டுமொரு அரிசித் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காகக் குறித்த அரிசி ஆலைகளைத் தயார்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version