இலங்கை
கொழும்பில் உள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறை!
கொழும்பில் உள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறை!
கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் ஏற்படக் கூடிய வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், புறக்கோட்டை, கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய காவல்துறை பிரிவுகளை அண்மித்த வீதிகளில் இந்த போக்குவரத்து ஒழுங்குகள் அமல்படுத்தப்படவுள்ளன.
மேலும் நாளை (31-12-2024) காலி முகத்திடலில் உள்ள வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலாக கட்டணத்துடன் கூடிய தனியார் வாகன நிறுத்துமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கட்டணமின்றிய வாகனத் தரிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறித்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் போது கொழும்பில் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும், பிரதான வீதியை மறித்து வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸார் சாரதிகளுக்கு தெரிவித்துள்ளனர்.