சினிமா

சாரல் மழையில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா.. புகைப்படங்கள்…

Published

on

சாரல் மழையில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா.. புகைப்படங்கள்…

சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். விஜய் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கேப்ரியல்லா, அதன்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.இதனை தொடர்ந்து ஐரா, N4, செத்தும் ஆயிரம் பொன், கருப்புதுரை போன்ற படங்களில் நடித்தும் வந்தார். அதன்பின் சன் டிவியில் 2021ல் துவங்கப்பட்ட சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 1144 எபிசோட்டுடன் சுந்தரி சீரியல் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது.இந்த சீரியலில் நடிக்கும் போது சமீபகாலமாக சுந்தர் தன் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவருடன் இணைந்து புகைப்படம் எடுத்தும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார் கேப்ரியல்லா.தற்போது சீரியலில் இருந்து சற்று விலகி இருப்பதாக கூறி சொந்த ஊருக்கு சென்று சில வேலைகளை செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா கர்பகால போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.சாரல் மழையில் நடந்தபடி பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கேப்ரியல்லா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version