சினிமா
டைவர்ஸ் நடக்கும்.. கடுப்பான ஜோதிகா!! சீக்ரெட்டை உடைத்த ஜோதிடர்..
டைவர்ஸ் நடக்கும்.. கடுப்பான ஜோதிகா!! சீக்ரெட்டை உடைத்த ஜோதிடர்..
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே சினிமா ஜோடிகளில் விவாகரத்துக்களும் பிரிவுகளில் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் விவாகரத்து செய்திகளை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர்.அந்த வரிசையில் சூப்பர் ஜோடி என்று கூறப்படும் சூர்யா – ஜோதிகா இருவரும் பிரியவுள்ளதாகவும் பல வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஜோடியாக ஜோதிகா – சூர்யா புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு முற்றுப்புள்ளியும் சமீபத்தில் வைத்தனர்.கங்குவா படம் ரிலீஸ் சமயத்தில் கூட இப்படியான செய்திகளை கேட்டு ஜோதிகா கடுப்பாகி கணவருடன் ஜோடியாக மும்பை பக்கம் சென்று வந்தார்.இந்நிலையில் ஜோதிட சத்குருஜி Mehro என்பவர் ஜோதிகா – சூர்யா பற்றிய ஒரு தகவலை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஜோதிகா வளர்ந்து வந்த சமயத்தில் சூர்யாவை காதலித்தார். அப்போது என்னிடம் வந்து நான் ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார்.அதற்கு நானோ செய்து கொள்ளலாம், ஆனால் விவாகரத்து நடிக்கும் என்று சொன்னேன். உடனே அவர் டென்ஷனாகிவிட்டார். அதனையடுத்து ஒரு படத்தின் ஸ்பெஷல் காட்சியில் ஜோதிகா என்னை பார்த்தார், ஆனால் என்னிடம் பேசவே இல்லை என்று வெளிப்படையாக கூறினார்.