இந்தியா

தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி

Published

on

தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்​பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்​கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்ற நிலையில் நேற்றுடன் 117ஆவது அத்தி​யா​யத்தை எட்டி​யுள்​ளதுடன் இந்தாண்​டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

இதில் உலகிலேயே மிகவும் தொன்​மையான மொழி தமிழ் மொழி ஆகும் என்றும் இது, இந்தி​யர்கள் அனைவருக்கும் பெரு​மித​மான, பெருமை சேர்க்​கும் விடயம் என்றும் உலகெங்​கிலும் உள்ள நாடு​களில் தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த மாத இறுதி​யில் ஃபிஜி​யில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 80 ஆண்டு​களில் ஃபிஜி​யில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழியை பயிற்று​விப்பது இதுவே முதல் முறையாகும்.

Advertisement

மேலும், ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்​சா​ரத்​தை​யும் கற்றுக்​கொள்​வ​தில் அதிக ஆர்வம் காட்டு​கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த சம்பவங்கள் வெறும் வெற்றிக் கதை அல்ல. நம்மை பெரு​மிதத்​தால் நிரப்பு​பவை – என்றார். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version