சினிமா
தெறி டப்பிங்கை கூட அப்படியே காப்பி அடித்த பேபி ஜான்!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..
தெறி டப்பிங்கை கூட அப்படியே காப்பி அடித்த பேபி ஜான்!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் 2016ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது தெறி படம். இப்படத்தினை தொடர்ந்து தெறி படம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.இதனை தொடர்ந்து இந்தி ரீமேக்கில் பேபி ஜான் என்ற பெயரில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் வெளியானது. அட்லீ தயாரிப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய பிளாப்பை சந்தித்து வசூலில் அடி வாங்கியும் வருகிறது.இந்நிலையில், தெறி படத்தின் ஒரு காட்சி இந்தியில் எப்படி டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டதோ அதையே காப்பி அடித்து பேபி ஜான் படத்தில் வைத்துள்ளனர் படக்குழுவினர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அட்லீயை சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.