சினிமா

படுத்த படுக்கையில் இருக்கிறாரா தனுஷ்? முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..

Published

on

படுத்த படுக்கையில் இருக்கிறாரா தனுஷ்? முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், நடிப்பு இயக்கம் என்று பிஸியாக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் குபேரா படமும் இயக்கத்தில் நிலவுக்கு என்மீது என்னடி கோபம் படமும் ரிலீஸாகவுள்ளது. மேலும் இட்லி கடை என்ற படத்தினையும் தனுஷ் தற்போது இயக்கி வருகிறார்.சமீபத்தில் இட்லி கடை படத்தின்போது ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தால் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியளித்தது. இந்நிலையில், பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.இட்லி கடை படத்தில் ஒரு காட்சியில் வீடு ஒன்று கொளுத்தப்பட்டு அதில் ஏதோ தேடுவது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, புகை அவருக்கு செட்டாகாது என்பதற்காக டூப் போட சொல்லி சிலர் கூறியும் தனுஷ் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம்.நானே படத்தின் இயக்குநர் என்பதால் பிடிவாதமாக அந்த காட்சியில் நடித்துள்ளார். இதனால் உடலில் சிக்கலாகி இரு நாட்கள் சென்னைக்கு வந்து ரெஸ்ட் எடுத்துள்ளார்.அவர் இப்போது சென்னையில் இல்லையாம், வெளிநாட்டில் இருக்கிறாராம். நியூ இயர் எல்லாம் முடிந்து மீண்டும் சண்டைக்காட்சியில் நடிக்கவும் இருக்கிறாராம். அவர் படுத்த படுக்கையில் எல்லாம் இல்லை என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version