டி.வி

பிக்பாஸ் டைட்டிலுக்காக முத்து எடுத்த அதிர்ச்சி முடிவு.? மஞ்சரிக்கு அடித்த ஜாக்பாட்

Published

on

பிக்பாஸ் டைட்டிலுக்காக முத்து எடுத்த அதிர்ச்சி முடிவு.? மஞ்சரிக்கு அடித்த ஜாக்பாட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் டிக்கெட் டு பினாலே  டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது விஜய் சேதுபதி நானும் ரொம்ப ஆவலா இருக்கின்றேன்.. இதில் யாரு டிரெக்டா பைனலுக்கு போறாங்க என்பதை பார்ப்பதற்கு என சபையில் வைத்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில்,  விஜய் சேதுபதி நேற்றைய தினம் டிக்கெட் டு  பினாலே கார்ட்டை காட்டும் போது அது எனக்கே எனக்கா என்பது போலவே முத்துக்குமரன் ஆக்சன் போட்டுள்ளார். மேலும்  அதற்காகவே நேற்று இரவிலிருந்து வேற லெவலில் தயாராகி  வருவதையும் எபிசோட்டில் காண முடிந்துள்ளது.அதன்படி முத்துக்குமரன் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றால் யாருக்கு சாதகமோ, பாதகமோ மஞ்சரிக்கு மட்டும் ஜாக்பாட் அடித்தது போல இருக்கும். அதற்கு காரணம் முத்துக்குமரன் நேராக பைனலுக்கு சென்றால் அவருடைய ஓட்டுக்களும் மொத்தமாக மஞ்சரிக்கு கிடைக்கும். இதனால் அவர் ரெண்டு வாரங்கள் எந்தவித தடங்களும் இல்லாமல் பைனலுக்கு  முன்னேறுவார்.தற்போது முத்துக்குமரன் சௌந்தர்யாவை தவிர ஏனைய போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி உள்ளார்கள். மேலும் நேற்று இரவு முத்துவுடன் பேசிய ஜாக்குலின், பிக்பாஸ் டைட்டில் உனக்கு அப்படி இல்லை என்றால் எனக்கு தான் கிடைக்க வேண்டும்.. நம் இருவரை தாண்டி வேறு யாருக்கும் கிடைப்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்திருந்தார்.எனவே இன்றிலிருந்து அதற்காக முத்துக்குமரன் எப்படி மாறப் போகின்றார்? என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். அத்துடன் முத்துக்குமரன் ராணவுக்கும் அட்வைஸ் பண்ணி முன்னேறி வருவதற்கான வழிகாட்டலை செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version