இந்தியா

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி: புத்தாண்டு பரிசாக அறிவிக்க வலியுறுத்தல்!

Published

on

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி: புத்தாண்டு பரிசாக அறிவிக்க வலியுறுத்தல்!

புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் போக்குவரத்து ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், “போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஆற்றொணா துயரும், அல்லலும், பொருளாதார நலிவு காரணமாக வறுமையின் வாட்டமும் குறித்து மீண்டும் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

Advertisement

அனைத்துக்கும் காரணமாக இருப்பது தொடர்ந்து மறுக்கப்படும் அகவிலைப்படி உயர்வு தான்.

எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதிகாரிகளை அழைத்து பேசி, தேர்தல் வாக்குறுதிப்படி அகவிலைப்படி உயர்வை புத்தாண்டு பரிசாக அறிவிக்க வேண்டும் என 95,000 ஓய்வூதியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version