இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கும் கப்பல் சேவை!

Published

on

மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கும் கப்பல் சேவை!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. 

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Advertisement

மோசமான வானிலை காரணமாக அச்சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 
வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அத்துடன் இதற்கான முற்பதிவுகள்இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியிருக்கிறது. மேலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த சேவை கிடைக்கும் என்றும், ஒரு முறை சென்று வருவதற்கான போக்குவரத்து கட்டணம் இந்திய மதிப்பில் 35ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முறையேனும் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையேயான கப்பல் சேவை தொடர்ந்து நீடிக்குமா..? என்ற எண்ணம் பயணிகளிடத்தில் ஏற்பட்டு இருக்கிறமை குறிப்பிட்டதக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version