சினிமா

வீர தீர சூரன் திரைப்படம் எப்படி இருக்கு..! முதல் விமர்சனம் கொடுத்த வலைப்பேச்சு..!

Published

on

வீர தீர சூரன் திரைப்படம் எப்படி இருக்கு..! முதல் விமர்சனம் கொடுத்த வலைப்பேச்சு..!

பிரபல நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இதன் ஷூட்டிங் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் வலைப்பேச்சு செய்தியாளர். இந்த திரைப்படம் குறித்து செய்தியொன்றை பகிர்ந்துள்ளார்.  இயக்குநர் அருண்குமார்  இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என வலைப்பேச்சு செய்தியாளர் இவ்வாறு கூறியிருந்தார். “விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பல படங்கள் வெளியாகுவதால் 24ம் திகதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்காங்க. இப்ப ஷூட்டிங் எல்லாம் முடிய RR இல்லாம பைனல் வீடியோ போட்டு பார்த்து இருக்காங்க. பயங்கர ஹாப்பியாம், படம் நல்லா வந்து இருக்கு” என்று கூறினார். மேலும் “இரவு காட்சிகள் தான் நிறைய இருந்து இருக்கு. முதல் பார்ட் பிறகு வரும் இப்போ பார்ட் 2 தான் வரப்போகிறது. அதுக்கும் சேர்த்து இப்பயே சில காட்சிகளை இயக்குநர் சூட் பண்ணிட்டாரு.  அந்த அளவுக்கு படம் நல்லா வந்து இருக்காம் விக்ரம் எல்லாம் ரொம்ப ஹாப்பியா இருக்காராம்” என்று கூறினார் வலைப்பேச்சு செய்தியாளர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version