இலங்கை

வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Published

on

வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

வெல்லம் இரும்புச்சத்து அதிகம் மிக்க உணவுப் பொருள் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் வெல்லம் சாப்பிட்டு எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கு எப்படி சாப்பிட்டு எடையைக் குறைக்கலாம்  என நாம் இங்கு  பார்ப்போம்.

சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள் நமது தாத்தா பாட்டி சாப்பாட்டை முடித்த பின் சிறிதளவு வெல்லம் உட்கொள்வார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஏன் என்றால் அதன் பின்னால் ஒரு நல்ல காரணம் இருக்கிறது.

Advertisement

வெல்லத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிரம்பி உள்ளது மட்டுமல்லாது சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைந்த கலோரிகளே இருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெல்லமானது எடையை குறைக்க உதவும் என்பதை உறுதிப்படுத்தும் நான்கு வழிகள்

நீங்கள் பொதுவாக அறிந்ததுதான் உங்களின் செரிமானம் சீராக இயங்க வில்லை என்றால் அது உண்மையில் உங்கள் முழு உடலையும் அழிவை ஏற்படுத்திவிடும். தினமும் உணவுக்குப் பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமான நொதிகளைச் செயல்படுத்த உதவுகிறது. மேலும் உணவுக்குப் பிறகு உங்களால் இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்த முடியாவிட்டால் உணவுக்குப் பிறகு ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிடுவது உங்களின் இனிப்பு உண்பது உண்பதற்கான ஆசையையும் நிறைவு செய்துவிடும்.

வெள்ளம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. எடை குறைக்க மேலும் துரிதப்படுத்துகிறது. இது இரத்தத்தை சுத்தப்படுத்தவும் மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. உடலில் கழிவுகள் நீங்கி சுத்தம் செய்யப்பட்டாலே உடலில் ஏற்படும் மந்தத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.

Advertisement

இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் உங்கள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதால் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக குறைத்து உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. நம்முடைய உடலின் மெட்டபாலிசம் மிகச்சரியாக இருந்தாலே மற்ற எல்லா பிரச்சினைகளையும் நம்முடைய உடலே தானாகவே சரிசெய்து கொள்ளும்.

அது உடல் எடையை நிர்வகிப்பதையும் சேர்த்து. அதனால் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உணவுக்குப் பின்னும் காலை எழுந்தவுடனும் சிறிது வெல்லத்தை சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வாருங்கள்.

இதில் ஜிங்க் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் நிறைந்திருப்பதால் இது உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்டை சமப்படுத்த உதவுவதோடு உடலுக்கு தேவையான நீர் சக்தியையும் நீர் சக்தியையும் தருகிறது. உடலுக்குத் தேவையான சக்தியை சமநலைப்படுத்தி உடலின் ஆற்றலை சேமிக்க உதவுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version