சினிமா

17 வயதில் என் அப்பா வயது நபர் கொடுத்த டார்ச்சர்!! நடிகை அஸ்வினி நம்பியார்..

Published

on

17 வயதில் என் அப்பா வயது நபர் கொடுத்த டார்ச்சர்!! நடிகை அஸ்வினி நம்பியார்..

90-ஸ் காலக்கட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அஸ்வினி நம்பியார் (Rudra). பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை அஸ்வினி, தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சிறுவயதில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.அதில், என்னுடைய 17 வயதில் என் தந்தை வயதுள்ள ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். அதுதான் என் வாழ்க்கையை மிகவும் பாதித்தது. அந்த அனுபவம் என்னை மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அதனால் நான் சோர்வடைந்தேன். அந்த சம்பவம் நடந்து 32 வருடங்களுக்கும் மேலாகியும் அந்த நினைவுகள் இன்னும் என்னைவிட்டு செல்லவில்லை, எனக்குள் ஒரு மோசமான உணர்வு இருக்கிறது.ஆனால் இந்த வாழ்க்கையை மாற்றும் பயணத்திற்கு பின் என்னால் அதை மறக்கவும் மன்னிக்கவும் முடிந்தது என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் நடிகை அஸ்வினி நம்பியார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version