சினிமா

8 மாத கர்ப்பம் மூளையில் ரத்த கட்டு! வைத்தியசாலையில் வொண்டர் வுமன் நடிகை!

Published

on

8 மாத கர்ப்பம் மூளையில் ரத்த கட்டு! வைத்தியசாலையில் வொண்டர் வுமன் நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தான் குழந்தையை சுமந்து கொண்டு இருந்த போது, தனக்கு மூளையில் ரத்த கட்டு இருப்பது தெரிந்து பெரும் சிரமத்தை சந்தித்ததாக” கூறியுள்ளார். இந்த விடயம் ரசிகர்களிடத்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வொண்டர் வுமனாக நடித்து பிரபலமானவர்  நடிகை கால் கடோட். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான யாரோன் வர்சனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த  பதிவில் ” இந்த ஆண்டு எனக்கு சவாலான ஆண்டாக இருந்தது. என் தனிப்பட்ட கதையை எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் சொல்கிறேன். பலருக்கு இது விழிப்புணர்வு ஏற்படும். 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு 100 பேரில் 3 பேர் மூளையில் இரத்தக் கட்டியை உருவாக்கும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.இது குணப்படுத்தக்கூடியது ஒன்றுதால், ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம் இல்லை என்றால் பெரும் சிக்கல் தான். இந்த பதிவினை படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் உடல் மீது கவனம்  செலுத்த வேண்டும் என கூறி குழந்தையை வைத்திருப்பது போன்ற புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version