சினிமா
KGF பாணியில் மிரட்டிய மார்கோ திரைப்படம்.. தமிழ் ரிலீஸ் எப்போது தெரியுமா?
KGF பாணியில் மிரட்டிய மார்கோ திரைப்படம்.. தமிழ் ரிலீஸ் எப்போது தெரியுமா?
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் உன்னி முகுந்தன். இவர் பல வெற்றி படங்களில் நடித்து மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.தமிழில தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் படத்திலும் உன்னி முகுந்தன் நடித்திருந்தார். அதன் பின்பு சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லன் ஆக நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது கேரக்டர் பலரையும் கவரும் வகையில் காணப்பட்டது.இதைத்தொடர்ந்து ஹனீப் அடேனி இயக்கத்தில் மார்கோ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆக்சன் திரில்லர் நிறைந்த கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த நிலையில், மார்கோ படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இந்த படம் தமிழில் எதிர்வரும் ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மார்கோ திரைப்படம் வெளியாகி சுமார் ஐந்து நாட்களிலேயே 50 கோடி ரூபாயை வசூலித்திருந்தது.சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையிலையே இந்த திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 3-ம் தேதி தமிழில் ரிலீஸ் ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.