இலங்கை

இரவில் ழுழ்கியுள்ள மஸ்கெலியாவின் பிரதான சாலைகள்… பெரும் அவதியில் மக்கள்

Published

on

இரவில் ழுழ்கியுள்ள மஸ்கெலியாவின் பிரதான சாலைகள்… பெரும் அவதியில் மக்கள்

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் மின் குமிழ்கள் ஒளிராததால் இரவுவேளைகளில் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பணிபுரியும் சிற்றூலியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இல்லங்களுக்கு செல்லும் வழியில் வீதிகள் மிகவும் மோசமாக உள்ள நிலையிலும் வைத்திய சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் பெருமளவில் பற்றைக் காடாக உள்ளது.

Advertisement

இதனால் இரவு வேளைகளில் பன்றிகள் மற்றும் சிறுத்தை பீதியுடன் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்திய சாலையில் பணி புரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வைத்தியசாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தன.

குறிப்பாக கடந்த சில வருடங்களாக அவற்றை மஸ்கெலியா மின்சார சபை அகற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

எவ்வாறாயினும் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பகுதியில் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை மற்றும் மாவட்ட வைத்தியசாலையை கிராமிய வைத்தியசாலையாக தரம் குறைத்தமை போன்றவையுடன் சகல வசதிகளும் கொண்ட 4 மாடிகொண்ட இந்த வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version