தொழில்நுட்பம்

எஸ்.பி.ஐ பெயரில் போலி வாட்ஸ்அப் லிங்க்… தொட்டால் பணம் பறிபோகும் – சைபர் க்ரைம் எச்சரிக்கை

Published

on

எஸ்.பி.ஐ பெயரில் போலி வாட்ஸ்அப் லிங்க்… தொட்டால் பணம் பறிபோகும் – சைபர் க்ரைம் எச்சரிக்கை

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலவி வரும், ‘வாட்ஸ்அப் லிங்’கை தொட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும்’ என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில், புதுச்சேரியில் வாட்ஸ்அப் குழுக்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கி பெயரில், இணையதள லிங்க் பரவி வருகிறது. அதில், ‘உங்கள் வங்கி கணக்கில் 7,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. லிங்கை திறந்து பெற்றுக் கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ., பரிசு புள்ளிகளை பணமாக்கி கொள்ளுங்கள். உங்கள் ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைத்துக் கொள்ளுங்கள்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.லிங்கை தொட்டு, அந்த பைலை திறந்ததும், வாட்ஸ்அப் குழுக்களின் ஐகான்கள் மற்றும் பெயர்கள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என மாறி விடுகின்றன. அடுத்த சில நிமிடங்களில், நாம் எந்தெந்த வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து உள்ளோமோ அந்த குழுக்களுக்கும் அந்த லிங்க் பரவுகிறது. அந்த குழுவில் இருக்கும் யாராவது அந்த பைலை திறந்தால், அடுத்து வேறு குழுக்களுக்கும் இதேபோல் பரவி விடுகிறது. மோசடியான இந்த எஸ்.பி.ஐ., பைலை திறக்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version