இலங்கை
கவர்ச்சிகரமான இலங்கையை இனி பார்ப்பீர்கள்! ஜனாதிபதி அநுர பணிப்புரை
கவர்ச்சிகரமான இலங்கையை இனி பார்ப்பீர்கள்! ஜனாதிபதி அநுர பணிப்புரை
சுற்றுலாப் பயணிகள் கவரக்கூடிய இடமாக நாட்டை மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, “Clean Sri Lanka” (கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் (30-12-2024) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசியாவின் மிகவும் பெறுமதிமிக்க மற்றும் பசுமையான தீவாக இலங்கையை நிலைநிறுத்துவது பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
சுற்றாடல் மற்றும் கலாசாரத் துறைகள் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும் இந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முறையான மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.