இந்தியா

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா!

Published

on

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா!

வீட்டிலுள்ளவர்களுக்கு வழக்கமாக வெங்காய பக்கோடா, சீசனின்போது கிடைக்கும் காலிஃப்ளவர் பக்கோடா செய்து கொடுக்கும் இல்லத்தரசிகள், வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்து சத்தான இந்த பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாமே… இந்த ஆண்டின் கடைசி நாளை சிறப்பாகக் கொண்டாடலாமே!

விருப்பமான காய்கறிக் கலவை (கேரட், குடமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர்) – 300 கிராம்
கடலை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 300 மில்லி
உப்பு – தேவையான அளவு

Advertisement

அகலமான பாத்திரத்தில் காய்கறிக் கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி, 10 – 15 நிமிடங்கள் மூடிவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு மாவை பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையைப் பொரித்தெடுக்கவும். பக்கோடாக்களுடன் கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version