நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 31/12/2024 | Edited on 31/12/2024

தமிழில் ஆண்டான் அடிமை, வேதம், பாளையத்து அம்மன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் திவ்யா உன்னி. மலையாள நடிகையான இவர், பரதநாட்டிய கலைஞராகவும் வலம் வருகிறார். இப்போது நடிப்பில் இருந்து விலகி பரதநாட்டியம் நடனபள்ளியை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேரளா கொச்சியில் ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் திவ்யா உன்னி தலைமையில் 11,600 நடனக்கலைஞர்கள் ஒன்று திரண்டு ஒரே நிறத்தில் உடை அணிந்து அனூப் சங்கர் பாடிய பாடலுக்கு எட்டு நிமிடம் நடனமாடினர். இந்த நிகழ்வில் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து 550 நடன ஆசிரியர்களுக்குக் கீழ் நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

Advertisement

இந்த நிகழ்ச்சியின் மூலம் இதற்கு முன்பு கின்னஸ் சாதனையாக இருந்த 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த 6 மாதங்களாக பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.