இலங்கை

சகோதரர் கைது; குடும்பத்தோடு நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர்!

Published

on

சகோதரர் கைது; குடும்பத்தோடு நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்திற்கு சென்ற மனுஷ நாணயக்கார , பின்னர் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

முதலில் மனுஷ நாணயக்கார இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் , அதன் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், வருட இறுதியில் தனிப்பட்ட பயணமாக மட்டும் வெளிநாட்டில் இருப்பதாகவும், விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மனுஷ நாணயக்காரவின் ​​ சகோதரர், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந் நிலையிலேயே , முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version